» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டில் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்து ஒருவர் படுகாயம்; பொருட்கள் நாசம்!
ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 9:25:56 AM (IST)
முக்காணியில் வீட்டில் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்து ஒருவர் படுகாயம் அடைந்தார். வீட்டில் இருந்த பிரிட்ஜ், டி.வி., பீரோ உள்ளிட்ட பொருட்களும் எரிந்து நாசமானது.
தூத்துக்குடி மாவட்டம், முக்காணி ரவுண்டானா காமராஜ்நகரில் வசித்து வருபவர் ஐகோர்ட்துரை (53). இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். ஐகோர்ட்துரை இனிப்பு, பலகாரங்கள் தயார் செய்து கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல் வீட்டின் ஒரு பகுதியில் தனியாக கேஸ் அடுப்பில் இனிப்பு, பலகாரங்கள் தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டரின் மேல் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ வேகமாக அந்த அறை முழுவதும் பரவியது.
இதனையடுத்து திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக நிலைய அதிகாரி ராஜமூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை உடனடியாக அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். தொடர்ந்து அங்கிருந்த 2 சிலிண்டர்களை வெளியே கொண்டு வந்து அப்புறப்படுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் தீக்காயம் அடைந்த ஐகோர்ட்துரையை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தீ விபத்தினால் வீட்டில் உள்ள பிரிட்ஜ், டி.வி., பீரோ உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










