» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைந்தது : பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 9:13:26 AM (IST)



தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் போட்டிப்போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலையில் கரைக்கு திரும்பினர். இவர்கள் பிடித்து வந்த மீன்களை வாங்க திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று காலை முதலே பொதுமக்களும், வியாபாரிகளும் குவியத் தொடங்கினர்.

கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக சீலா மீன், ஊளி, விளை, பாறை, சூரை போன்ற மீன்களின் வரத்து சுமாராகவே காணப்பட்டது. அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தோல் பாறை மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. இந்த மீன் கிலோ ரூ.250 வரை விற்பனையானது. இதை ஏராளமான மீன் ஏற்றுமதியாளர்கள் வாங்கிச் சென்றனர்.

அதுபோல் சாளை மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் 1 கூடை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையான சாளை மீன் நேற்று 1 கூடை ரூ.1,500-க்கு விற்பனையானது.

மேலும் சீலா மீன் கிலோ ரூ.1,000 வரையும், விளை மீன் ரூ.350 முதல் ரூ.400 வரையும், ஊளிமீன் ரூ.400 வரையும், பாறை மீன் ரூ.300 முதல் ரூ.350 வரையும், கனவா மீன் ரூ.350 வரையும், குருவளை, தம்பா, பண்டாரி ஆகிய மீன்கள் ரூ.300 வரையும், நெத்திலி 1 கூடை ரூ.1,700 வரையும், மத்திக்குண்டான் மீன் கூடை ரூ.800 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்களின் விலை குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் போட்டிப்போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory