» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போதை பொருள் இல்லாத தமிழகம் : மதர் தெரசா கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு!
வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 9:50:13 AM (IST)

செயின்ட் மதர் தெரசா கல்லூரியில் போதையில்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில் மதர் தெரசா கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தமிழகத்தில் போதையில்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட் மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் முனைவர் ஜார்ஜ் கிளிங்டன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மகளிர் காவல்துறை ஆய்வாளர் வனிதா ஹரிஹரன் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.
போதை பொருள் பயன்படுத்துவதால் விளையும் தீமைகளை பற்றியும், உயர்கல்வியில் வெற்றிபெற்று வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்று அறிவுத்தினார். இதனையடுத்து, மாணவர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை பேராசிரியர் ராமசாமி ரீகன் மற்றும் நிர்வாக மேலாளர் விக்னேஷ் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)











படித்த முட்டாள்Aug 17, 2024 - 12:14:45 PM | Posted IP 162.1*****