» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தங்கலான் ரிலீஸான தியேட்டரில் ரசிகர்கள் வாக்குவாதம்: தூத்துக்குடியில் பரபரப்பு!

வியாழன் 15, ஆகஸ்ட் 2024 12:46:53 PM (IST)

தூத்துக்குடியில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் வெளியான திரையரங்கில் ஆடியோ முறையாக கேட்காததால் தியேட்டர் நிர்வாகத்தினருடன்  ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

நடிகர் விக்ரம் நடித்து இயக்குனர் ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இன்று வெளியானது. தூத்துக்குடியில் புதிதாக நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள கிளியோபாட்ரா திரையரங்கில் இன்று இந்த படம் வெளியாகி காலை9:30  மணிக்கு திரைப்படம் திரையிடப்பட்டது. திரைப்படம் திரையிட்டது முதல் திரைப்படத்தின் ஆடியோ முறையாக திரையரங்கில் இருந்த ரசிகர்களுக்கு கேட்காததை தொடர்ந்து திரையரங்க நிர்வாகத்திடம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முறையிட்டனர்.

ஆனால் நிர்வாகம் இதற்கு உரிய பதிலளிக்காததை தொடர்ந்து திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரையரங்கை விட்டு வெளியே வந்து திரையரங்க ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து திரையரங்க நிர்வாகம் சார்பில் திரைப்படம் காண வந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டிக்கெட் பணம் திருப்பி வழங்கப்பட்டது. இதன் காரணமாக திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


மக்கள் கருத்து

TAMILAug 16, 2024 - 02:27:14 PM | Posted IP 172.7*****

CLEOPATRA THEATRE IS VERY GOOD SOUND SYSTEM, CURRENT OWNER IS REBUILD THEATRE IS VERY NICE AND CLEAN. SURROUND SOUND SYSTEM IS VERY GOOD.

PrabakarAug 16, 2024 - 01:17:05 PM | Posted IP 162.1*****

Toilet kevalam.urin pass pantrathu full opena iruku.

worst filmAug 16, 2024 - 11:34:37 AM | Posted IP 172.7*****

worst film... intha padathuku ivvalavu buildupaaaa

SrinivasanAug 15, 2024 - 08:54:54 PM | Posted IP 162.1*****

Very worst theater ppmt was build a good theatre on 1987.but now the current owner rebuild this theatre via very wrost builder

ஆனந்த்Aug 15, 2024 - 01:07:39 PM | Posted IP 172.7*****

திரைப்படம் அறுவை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory