» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் சுதந்திர தின விழா: இந்திய வரைபடத்தில் அணிவகுத்து நின்ற மாணவர்கள்!
வியாழன் 15, ஆகஸ்ட் 2024 12:30:37 PM (IST)

கோவில்பட்டியில் நடந்த சுதந்திர தின விழாவில் இந்திய வரைபடத்தில் தேசத் தலைவர்களின் மாஸ்க் அணிந்து மாணவர்கள் அணி வகுத்து நின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் இந்திய வரைபடத்தில் பாரதியார், வ.உ.சி, நேரு, வேலுநாச்சியார், சுபாஷ் சந்திர போஸ், காந்தி, காமராஜர் ஆகியோரின் மாஸ்க் அணிந்து அணிவகுத்து நின்றனர். பள்ளி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.
பள்ளி முன்னாள் மாணவர் முத்து முருகன், பள்ளிக் குழு உறுப்பினர் மணிக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றார். நாடார் உறவின்முறை சங்கத் துணைத் தலைவர் செல்வராஜ் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். இதில் நாடார் உறவின்முறைச்சங்க உறுப்பினர் ராஜேந்திர பிரசாத், உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










