» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பேருந்துக்கு மாலை அணிவித்து வரவேற்ற கிராம மக்கள்!

புதன் 14, ஆகஸ்ட் 2024 3:57:50 PM (IST)



தூத்துக்குடி - சாயர்புரம் - திருவைகுண்டம் - திருநெல்வேலி இடையே உரிய நேரத்தில், உரிய வழித்தடத்தில் முறையாக இயக்கத்தை தொடங்கியுள்ள தடம் எண் 578 என்கிற பேருந்திற்கு கிராம மக்கள் மாலை அணிவித்து, வரவேற்பு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் - சிவகளை - பண்டாரவிளை - சாயர்புரம் - சேர்வைகாரன்மடம் -கூட்டாம்புளி-புதுக்கோட்டை - தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி இடையே தடம் எண் 578 என்கிற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. வழித்தட மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள இப்பேருந்து, தூத்துக்குடியில் காலை 9.45 மணி மற்றும் மாலை 5.45 மணியில் கிளம்பக் கூடியதாகும். 

ஆனால் சமீபகாலமாக காலையில் திருவைகுண்டத்தில் கிளம்பி தூத்துக்குடிக்கு வரும் இப்பேருந்து, அங்கிருந்து 9.45 மணிக்கு எடுத்து மீண்டும் திருவைகுண்டத்திற்கு செல்லாமல் வேறு இடங்களுக்கு மாற்றிவிடப்பட்டு வந்தது. திருவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கே தாமதமாக 10.00 மணிக்கு வருவதுதான் அதற்கு காரணமாக இருந்து வந்தது. இதனால் அடுத்த தடவையும்(மாலை 5.45 மணி) இந்த பேருந்து வழித்தடத்திற்கு சரிவர வராமல் போனதும் நடந்து வந்தது. எனவே வழித்தட பொதுமக்களுக்கு இதன் சேவை முழுமையாக கிடைக்காமல் போனது. 

அப்படியானால் திருவைகுண்டத்தில் அப்பேருந்தை அதன் பழைய உரிய கால நேரமான 7.55 மணிக்கு கிளம்ப செய்வதுதான் அதற்கு சரியான தீர்வு என்று பொதுமக்கள் கருதினர். எனவே இது குறித்து சேர்வைகாரன்மடம் ஊராட்சி உப தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா மற்றும் பொதுமக்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துகழக துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆகியோர்களிடம் மனுக்கள் மூலம் கோரிக்கை வைத்தனர். 

அதன்பேரில் இப்பேருந்து தற்போது திருவைகுண்டத்தில் அதன் உரிய நேரமான காலை 7.55 மணிக்கு கிளம்பி பயணத்தை தொடங்கி, தூத்துக்குடிக்கு 9.30 மணிக்கு சென்று அங்கிருந்து 9.45 மணிக்கு கிளம்பி மீண்டும் அதேவழித்தடத்தில் திருவைகுண்டம் செல்கிறது. அதுபோல் மாலை 4.00 மணிக்கு திருவைகுண்டத்தில் கிளம்பி மீண்டும் அதே வழித்தடத்தில் தூத்துக்குடிக்கு 5.30 மணிக்கு வருகிறது. அங்கிருந்து 5.45 மணிக்கு கிளம்பி மீண்டும் அதன் வழித்தடத்தில் திருவைகுண்டம் செல்கிறது.

இதனால் வழித்தட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தநிலையில் இன்று(14.08.2024) சக்கம்மாள்புரத்தில் வைத்து சேர்வைகாரன்மடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா, உறுப்பினர் குணபாலன் மற்றும் அப்பகுதி மக்கள், அப்பேருந்திற்கு வரவேற்பு அளித்தனர். பேருந்திற்கு மாலை அணிவித்து, பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இது குறித்து ஏஞ்சலின் ஜெனிட்டா, எங்கள் கிராம மக்களுக்கு மிகவும் பயன்பட்டு வரும் பேருந்து தடம் எண் 578. திருவைகுண்டத்தில் அப்பேருந்து லேட்டாக கிளம்பும் போது தூத்துக்குடிக்கு சென்று மீண்டும் எங்கள் வழித்தடத்துக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. வராமல் அப்படியே வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர். நாங்கள் முதலமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும், அமைச்சர், எம்.எல்.ஏவுக்கும் மனுக்கள் மூலம் கோரிக்கை வைத்தோம்.

நடவடிக்கை எடுக்கப்பட்டத்தின் அடிப்படையில் இப்போது அப்பேருந்து காலை, மாலை என இரண்டு தடவையும் அதன் உரிய நேரத்தில் இயக்கப்படுகிறது. இதனால் எங்கள் பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்றார். மேலும், கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும், நடவடிக்கை மேற்கொண்ட போக்குவரத்து கழக துறை அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 


மக்கள் கருத்து

Muthukrishnan ramaswamyAug 15, 2024 - 11:55:31 PM | Posted IP 172.7*****

இந்த பேருந்தை ஶ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கொங்கராயகுறிச்சி மணக்கரை வல்லநாடு வழியாக இயக்கினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்

MaryAug 14, 2024 - 08:01:52 PM | Posted IP 162.1*****

The bus reached 9.50a.m at tuticorin is very useful for office going public and

KumarAug 14, 2024 - 07:43:06 PM | Posted IP 162.1*****

நாகர்கோயில் திருநெல்வேலி சேரன்மகாதேவி டெப்போ ல இருந்து இந்த பஸ் operate பண்ணும் போது 4 சிங்கள் இந்த ரூட் ல வந்தது. அதுவும் ஒரு single இந்த ரூட் ல ஒரே பஸ் ல நாகர்கோயில் வரை போகலாம் சேரன்மகாதேவி டெப்போ ல இருக்கும் போது அம்பை வரை போகலாம். அப்போ எல்லாம் பஸ் காலைல ஸ்ரீவைகுண்டம் ல 8.25 கிளம்பும் இப்போ 7.50 கிளம்புனா தான் இவங்களுக்கு ரூட் ல வண்டி ஓட்ட முடியுமாம்

maryAug 14, 2024 - 06:32:45 PM | Posted IP 162.1*****

The bus reached 9.50 a.m at Tuticorin is useful for us

செல்விAug 14, 2024 - 04:37:39 PM | Posted IP 162.1*****

இந்த பேருந்து நேரம் மாற்றம் செய்த பின் இதற்கு பின்னால் வரும் தனியார் பேருந்துகளில் பெண்களும் கல்லூரி மாணவ மாணவிகளும் பேருந்து படிகட்டில் தொங்கி கொண்டு உயிருக்கு ஆபத்தான வகையில் பயணம் செய்கின்றனர்

செல்விAug 14, 2024 - 04:26:47 PM | Posted IP 172.7*****

நாகர்கோயில் திருநெல்வேலி சேரன்மகாதேவி டெப்போ ல இருந்து இந்த பஸ் operate பண்ணும் போது சரியாக வந்த பேருந்துக்கு இப்போ மட்டும் காலை 7.50 க்கு கிளம்பினால் மட்டும் தான் ரூட் ல வர முடியுமா

செல்விAug 14, 2024 - 04:24:01 PM | Posted IP 162.1*****

இதுக்கு முன்னாடி மற்ற டெப்போ ல இருந்து பஸ் வரும் போது ஸ்ரீவைகுண்டம் ல இருந்து காலை 8. 20 க்கு புறப்பட்டு சரியாக இதே ரூட் ல திரும்பி வந்த பேருந்து க்கு இப்போ மட்டும் காலை 7.55 கிளம்பினால் மட்டும் தான் return வர முடியுமா நிர்வாகம் சரியில்லை னு சொல்லுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory