» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை: எஸ்பி ஆல்பர்ட் ஜான் உறுதி!
புதன் 14, ஆகஸ்ட் 2024 3:20:09 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் நடமாட்டம் முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பதவியேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த அவருக்கு காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட மரியாதை ஏற்றுக் கொண்டு முறைப்படி தூத்துக்குடி மாவட்ட 33 வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது "தூத்துக்குடி மாவட்டத்தில் பொது மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எந்தவித பங்கமும் ஏற்படாத வகையில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். கடலோர மாவட்டம் என்பதால் இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையுடன் இணைந்து கடற் பகுதி வழியாக நடைபெறும் பல்வேறு கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் நடமாட்டம் முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்தையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஒரே காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்கள் மீது ஏதும் புகார்கள் வந்தால் உடனடியாக அவர்களை பணியிட மாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










