» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ .உ.சிதம்பரம் கல்லூரி இந்திய அளவில் 28வது இடம்!
புதன் 14, ஆகஸ்ட் 2024 3:10:41 PM (IST)
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி தேசிய தர வரிசையில் 28வது இடம், தமிழக அளவில் 8வது இடம் பிடித்துள்ளது.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரி ஏறத்தாழ இந்தியாவிலுள்ள நாற்பத்தி எட்யிரம் உயர்கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய இந்திய தேசிய தர வரிசை பட்டியல் 2024-ல் இந்திய அளவில் 28வது இடம், தமிழக அளவில் 8வது இடம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகதிற்குட்பட்ட 103 கல்லூரிகளில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இது கல்லூரியின் வரலாற்றில் ஓர் மைல்கல் என்றால் மிகையல்ல என்று கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ”கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான வளங்கள் (TLR), சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கல்வி அளித்தல் (ESCS)ஆராய்ச்சி ஆக்கக்கூறுகள் (Research Components), கல்லூரியிலிருந்து வெற்றிகரமாக பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் மாணவ மாணவியர் எண்ணிக்கை (Graduate Outcome), தேர்ச்சி விழுக்காடு (Pass Percentage), உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Higher Studies and Placements), புலன் உணர்வு (Perception) ஆகிய கூறுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை அமைந்திருப்பதால் எல்லா தளங்களிலும் வ.உ.சிதம்பரம் கல்லூரி பெற்ற படிப்படியான வளர்ச்சியையே இது காட்டுகிறது.
எதிர்காலத்தில் நாம் இன்னும் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இன்று இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த கல்லூரிகளும் நம்மை உற்று நோக்கி கொண்டிருக்கிறது. வ.உ.சிதம்பரம் கல்லூரியின் மூலமாக தூத்துக்குடி நகரும் தேசிய அளவில் கவனம் பெறுவதில் மகிழ்ச்சி. இந்த பெருமையை தொடர்ந்து நிலைநாட்டுவதற்கான பொறுப்பு நம் கரங்களில் இருக்கிறது என்பதை மனதில் நிறுத்தி நாங்கள் வெற்றிகரமாக பணிபுரிய வேண்டும் என்று விரும்புகிறேன்". இவ்வாறு கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு கூறினார்.
மக்கள் கருத்து
வெள்ளைச்சாமி பா,தூத்துக்குடி.Aug 15, 2024 - 12:56:11 PM | Posted IP 162.1*****
கல்லூரியின் வளர்ச்சிக்கு காரணமான மாணவர்களுக்கு மட்டு்மே இந்தப் பெருமை சேரும்.
த. உண்மையின் உரைகல்Aug 14, 2024 - 09:27:00 PM | Posted IP 162.1*****
தரமற்ற இருக்கைகள்.. சுகாதாரமின்மை.. பழைய பராமரிப்பற்ற வகுப்பறைகள்
உண்மையின் உரைகல்Aug 14, 2024 - 09:25:37 PM | Posted IP 162.1*****
இந்த கல்லூரிக்கு 28 வது இடம் எனில் மற்ற கல்லூரிகளின் நிலை என்ன.. 😄
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)











சரவணன்Aug 15, 2024 - 04:08:47 PM | Posted IP 172.7*****