» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கேரளா பர்னிச்சர் விற்பனை கண்காட்சி நாளை நிறைவு!

புதன் 14, ஆகஸ்ட் 2024 12:22:21 PM (IST)



தூத்துக்குடியில் நடைபெற்று வரும் கேரளா பர்னிச்சர் விற்பனை கண்காட்சி நாளை (15ம் தேதி) நிறைவு பெறுகிறது.

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் அமைந்துள்ள ராமையா மஹாலில் கடந்த 7 நாட்களாக தினமும் காலை 10.00 மணிமுதல் இரவு 9.30 மணிவரை நடைபெற்று வரும் கேரளா பர்னிச்சர் கண்காட்சி நாளை நிறைவடைகிறது. கண்காட்சியில் வீட்டிற்கு தேவையான  பர்னிச்சர்கள், சோபா, டைனிங் டேபிள் செட் மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான பிரத்யோகமான வடிவில் உருவாக்கப்பட்ட பர்னிச்சர்கள் உயர்ந்த தரத்தில் குறைந்த விலையில் உற்பத்தி விலையிலேயே கிடைக்கிறது. 

இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வாங்கி சென்றனர் .உலகப் புகழ்பெற்ற மைசூர் கேண்ட் கார்விங் பர்னிச்சர்கள், நீலாம்பூர் தேக்கு மர வகைகளால் வடிவமைக்கப்பட்ட பர்னிச்சர்கள், பழங்கால அரிய வகை மாடல்களில் உருவாக்கப்பட்ட அரண்மனை மாடல் பர்னிச்சர்கள், விதவிதமான மாடல்களில் கட்டில் , காம்பெக்ட் பெட்ரூம் செட், கார்னர் சோபா மெத்தை, டீ பாய்கள், டிரெஸ்ஸிங் டேபிள், பீரோ, கிடைக்கிறது.

சிறப்பு மர வகைகளில் எங்கள் சொந்த தயாரிப்பில் உருவாக்கப்பட்ட பர்னிச்சர்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து வகை பர்னிச்சர்கள் திருமண சீர்வரிசைக்கு தேவையான பர்னிச்சர்களும் ஒரே இடத்தில் 60 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது.  எண்ணிலடங்கா விதவிதமான பர்னிச்சர்களை தாங்கள் விரும்பும் வகையில் எங்களது கம்பெனி அரிய வகை தள்ளுபடியுடன் பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் பண்டிகை தினங்களில் அல்லது தாங்கள் விரும்பும் தேதியில் எடுக்க வேண்டிய பர்னிச்சரை கடைசி நாளான நாளை ஆஃபர் தொகையில் புக் செய்து முன்பணம் கட்டி தாங்கள் விரும்பும் தேதியை கூறினால் அந்த தேதியில் குறித்த இடத்தில் இலவசமாக டோர் டெலிவரி செய்து தருகிறோம். நாளையுடன் முடிவடையும் பர்னிச்சர் கண்காட்சியை வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள் என உரிமையாளர் நவ்ஷாத், மேலாளர் பினிஷ் மேத்யூ தெரிவித்தனர்


மக்கள் கருத்து

RameshAug 14, 2024 - 03:29:30 PM | Posted IP 172.7*****

கண்காட்சி நடத்தும் நிறுவன தொலைபேசி என் வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory