» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தில் 2வது இடம் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

புதன் 14, ஆகஸ்ட் 2024 12:10:24 PM (IST)



தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி 2வது இடம் பிடித்துள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடியில் மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்து வருகிறது. இன்று மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமையில் முகாம் நடைபெற்றது. துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டூராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் கலந்துகொண்ட மாநகராட்சி ஜெகன் பெரியசாமி பேசியதாவது "தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி கடந்த 2023-24 ஆம் ஆண்டு சிறப்பான முறையில் பணியாற்றியதாகவும் சுகாதாரப் பணிகள், சாலை வசதிகள் சிறப்பாக செய்து கொடுக்கப்டப்டுள்ளது. இதனை பாராட்டும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தில் இரண்டாவது மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது.

நாளை சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதினை வழங்குகிறார். இவ்விருதை மேயர் ஆகிய நானும், ஆணையரும் இணைந்து பெற்றுக் கொள்கிறோம்.  தூத்துக்குடி மாநகராட்சியில் மண்டல வாரியாக இதுவரை 5 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெறப்பட்ட 663 மனுக்களுக்கு 510 மனுக்கள் தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என்று மேயர் தெரிவித்தார். பின்னர் அவர் மக்களிடம் மனுக்களை பெற்றார். 

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம், துணை மாநகர பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் டாக்டர் வினோத் ராஜா, மண்டல ஆணையர் சுரேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் ஸ்டான்லி பாக்கியநாதன், மாநகராட்சி கவுன்சிலர்கள் பொன்னப்பன், இசக்கி ராஜா, சுரேஷ்குமார், சந்திரபோஸ், சரவணகுமார், கந்தையா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜேஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory