» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி : ஆக.25க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

புதன் 14, ஆகஸ்ட் 2024 11:53:41 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுள்ளவர்கள் இணையதளம் மூலமாக வருகின்ற 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், குழுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்படவுள்ளது - மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, 

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பேற்றவுடன் கடந்த ஆண்டு முதல் ”தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அப்போட்டிகளுக்காக மொத்த பரிசுத்தொகை ரூ.25.00 கோடி உட்பட ரூ.50.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. 

அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024-25ஆம் ஆண்டிற்கான போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட / மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெற உள்ளது.

அந்தவகையில், மாவட்ட அளவில், பள்ளி மாணவ / மாணவியர்களில் 12 முதல் 19 வயது வரையிலான பிரிவில் தனிநபர் போட்டிகளான தடகளப் போட்டியில் மாணவர்கள் பிரிவில் 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 3000 மீ, 110 மீ தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 1.5 கிலோ தட்டு எறிதல், 5 கிலோ குண்டு எறிதல் போட்டிகளும், மாணவியர்கள் பிரிவில் 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 100 மீ தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 1 கிலோ தட்டு எறிதல், 3 கிலோ குண்டு எறிதல் போட்டிகளும், 

நீச்சல் போட்டியில் மாணவ / மாணவியர்களுக்கு 50 மீ பிரி ஸ்டைல், 50 மீ பேக் ஸ்டோக், 50 மீ பிரஸ்ட் ஸ்டோக், 50 மீ பட்டர்பிளை ஸ்டோக், 100 மீ பிரி ஸ்டைல், 100 மீ பேக் ஸ்டோக், 100 மீ பிரஸ்ட் ஸ்டோக், 100 மீ பட்டர்பிளை ஸ்டோக், 400 மீ பரி ஸ்டைல், 200 மீ இன்டுவிஜல் மெட்லீ போட்டிகளும், இறகுப்பந்து, மேசைப்பந்து, கேரம் ஆகிய போட்டிகளில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளாகவும், செஸ் போட்டியில் தனி நபர் பிரிவாகவும், சிலம்பத்தில் தொடு போட்டி மற்றும் குழுப்போட்டிகளான கூடைப்பந்து, மட்டைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, கைப்பந்து, கையுந்துப்பந்து, கோ-கோ ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது.

கல்லூரி மாணவ / மாணவியர்களில் 17 முதல் 25 வயது வரையிலான பிரிவில் தனிநபர் போட்டிகளான தடகளப் போட்டியில் மாணவர்கள் பிரிவில் 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 3000 மீ, 110 மீ தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 2 கிலோ தட்டு எறிதல், 7.26 கிலோ குண்டு எறிதல் போட்டிகளும், மாணவியர்கள் பிரிவில் 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 100 மீ தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 1 கிலோ தட்டு எறிதல், 4 கிலோ குண்டு எறிதல் போட்டிகளும், நீச்சல் போட்டியில் மாணவ / மாணவர்களுக்கு 50 மீ பிரி ஸ்டைல், 50 மீ பேக் ஸ்டோக், 50 மீ பிரஸ்ட் ஸ்டோக், 50 மீ பட்டர்பிளை ஸ்டோக், 200 மீ பிரி ஸ்டைல், 200 மீ பேக் ஸ்டோக், 200 மீ பிரஸ்ட் ஸ்டோக், 200 மீ பட்டர்பிளை ஸ்டோக், 400 மீ பரி ஸ்டைல், 400 மீ இன்டு விஜல் மெட்லீ போட்டிகளும், இறகுப்பந்து, மேசைப்பந்து, கேரம் ஆகிய போட்டிகளில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளாகவும், செஸ் போட்டியில் தனிநபர் பிரிவாகவும், சிலம்பத்தில் தொடு போட்டி மற்றும் குழுப் போட்டிகளான கூடைப்பந்து, மட்டைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, கைப்பந்து, கையுந்துப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது.

அதுபோன்று, மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி (வயது வரம்பு இல்லை) ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடல் ஊனமுற்றோர் (Physically Challenged) பிரிவில் தடகளம், இறகுப்பந்து, சக்கர நாற்காலி மேசைப்பந்து, பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் (Visually Challenged) தடகளம், சிறப்பு கையுந்துப்பந்து, மனவளர்ச்சி குன்றியோர் பிரிவில் (Mentally Challenged) தடகளம், எறிபந்து, செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் (Hearing Impaired) தடகளம், கபாடி ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது.

மாவட்ட அளவில் பொதுப்பிரிவில் 15 முதல் 35 வயது வரை ஆண்கள் / பெண்களுக்கு தனிநபர் போட்டிகளான தடகளப் போட்டிகளில் ஆண்களுக்கு 100 மீ ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், 7.26 கிலோ குண்டு எறிதல் போட்டிகளும், பெண்களுக்கு 100 மீ, 1500 மீ ஓட்டப்போட்டிகள், நீளம் தாண்டுதல், 4கிலோ குண்டு எறிதல், இறகுப்பந்து, கேரம் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளாகவும், சிலம்பத்தில் தொடுபோட்டி மற்றும் குழுப் போட்டிகளான மட்டைப்பந்து, கபாடி, கையுந்துப்பந்து, கால்பந்து ஆகிய போட்டிகளும் நடைபெறவுள்ளது. மாநில அளவில் பொதுப்பிரிவில் 15 முதல் 35 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுப்பந்து மற்றும் கபாடி போட்டிகள் மட்டுமே நடைபெறும்.

மாவட்ட அளவில் அரசு ஊழியர்களுக்கு (வயது வரம்பு இல்லை) தனி நபர் போட்டிகளான தடகளப் போட்டிகளில் ஆண்களுக்கு 100 மீ ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், 7.26 கிலோ குண்டு எறிதல் போட்டிகளும், பெண்களுக்கு 100 மீ, 1500 மீ ஓட்டப்போட்டிகளும், நீளம் தாண்டுதல், 4 கிலோ குண்டு எறிதல், இறகுப்பந்து, கேரம் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பரிவுகளாகவும், செஸ் தனி நபர் போட்டியாகவும், குழுப் போட்டிகளான கபாடி மற்றும் கையுந்துபந்து ஆகிய போட்டிகளும் நடைபெறவுள்ளது.

மாநில அளவில் அரசு ஊழியர்களுக்கு (வயது வரம்பு இல்லை) ஆண்கள் / பெண்கள் என இருபாலருக்கும் இறகுப்பந்து, கேரம் ஆகிய போட்டிகள் மட்டுமே நடைபெறும். மேலும், நேரடியாக மண்டல அளவிலான போட்டிகளில், பள்ளி மாணவ / மாணவியர்களில் 12 முதல் 19 வயது வரை மற்றும் கல்லூரி மாணவ / மாணவியர்களில் 17 முதல் 25 வயது வரையுள்ளவர்களுக்கு கடற்கரை கையுந்துப்பந்து, டென்னீஸ் ஒற்றையர் இரட்டையர் பிரிவுகளாகவும், பளு தூக்குதல், ஜூடோ, குத்துச்சண்டை ஆகிய போட்டிகளுக்கு எடைப் பிரிவுகளாகவும், வாள்சண்டை மாணவர்கள் / மாணவியர்களுக்கு பாயில்(Foil), எப்பீ(Epee), ஸ்பேரி(Sabre) ஆகிய போட்டிகளும் நடைபெறவுள்ளது.

அதுபோல, நேரடியாக மாநில அளவிலான போட்டிகளில் பள்ளி மாணவ / மாணவியர்கள் 12 முதல் 19 வயது வரை மற்றும் கல்லூரி மாணவ / மாணவியர்கள் 17 முதல் 25 வயது வரையிலான பிரிவில் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஜிம்னாஸ்டிக் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது. நேரடியாக மாநில அளவில் மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பெரு மூளை வாதம் (Celebral Palsy) பிரிவில் தடகளம், கால்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது.

எனவே, மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழுப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்படவுள்ளது. இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதன்முறையாக நான்காம் இடம் பெற்றவர்களுக்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக வழங்கிட உள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் இவ்வாண்டுக்கான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கு மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகள் பெற இயலும். ஒரு விளையாட்டு வீரர் ஒரே ஒரு விளையாட்டில் மட்டுமே பங்கேற்க முடியும். எனவே விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுள்ள அனைவரும் தவறாமல் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக வருகின்ற 25.08.2024க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி – 628 001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0461-2321149 என்ற தொலைபேசி எண்ணிலும், 7401703508 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

அதுமட்டும்மல்லாமல், சென்னை தலைமையிடத்தில் செயல்பட்டுவரும் "ஆடுகளம்” என்ற தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

Harish KumarAug 17, 2024 - 03:26:44 PM | Posted IP 162.1*****

100 mtr

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory