» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க உத்தரவு!
திங்கள் 15, ஜூலை 2024 5:36:01 PM (IST)
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்எஸ் சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ-யின் விசாரணை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், துப்பாக்கி சூடு சம்பவத்தை நியாயமாக விசாரிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தவறிழைக்கவில்லை என எப்படி அறிக்கை அளிக்க முடியும் என்றும் சிபிஐ-க்கு கேள்வி எழுப்பினார்கள். சுதந்திரமான விசாரணை அமைப்பின் முடிவு கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணை சிபிஐ-யின் கையாலாகாதனத்தை காட்டுவதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் பெயர்களில் உள்ள சொத்து விவரங்களை சேகரித்து, இரண்டு வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரிக்கை : தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 24, ஜூலை 2026 12:10:56 PM (IST)

தூத்துக்குடி காவல் நிலைய மரண விவகாரம்: இளைஞர் அருணாச்சலத்தின் உடல் ஒப்படைப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 12:04:00 PM (IST)

கடைகளில் 240 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பறிமுதல் – ரூ.13,000 அபராதம்!
வெள்ளி 24, ஜூலை 2026 11:30:47 AM (IST)

தூத்துக்குடி அருகே கொடூரம்: குடிபோதை தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை – 3 பேருக்கு வலைவீச்சு!
வெள்ளி 24, ஜூலை 2026 10:54:24 AM (IST)

தூத்துக்குடியில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 8:39:07 AM (IST)

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிராக சிபிஎம் காத்திருப்பு போராட்டம்!
வெள்ளி 24, ஜூலை 2026 8:32:50 AM (IST)








