» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொதுத்தேர்வில் சிறப்பிடம்பெற்ற மாணவர்களுக்கு பரிசு

செவ்வாய் 11, ஜூன் 2024 4:02:33 PM (IST)கோவில்பட்டியில் ஸ்ரீ நாராயணகுரு கல்வி வளர்ச்சிகுழு சார்பில் அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

கோவில்பட்டி புதுக்கிராமம் ஆவுடையம்மாள் திருமண மண்டபத்தில் 10 மற்றும் 12ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூபாய்1000 வீதம் 31 மாணவர்களுக்கும், முதலிடம் பெற்றவருக்கு ரூபாய்5000 மற்றும் நினைவு பரிசும், 2ம் இடம்பெற்றவருக்கு ரூ 3000மற்றும் நினைவு பரிசும், 3ம் இடம் பெற்றவருக்கு ரூ 2000 மற்றும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு தலைவர் சங்கர் தலைமை வகித்தார். இன்ஜினியர் மாரிக்கண்ணன்,  மேனாள்சுகாதார ஆய்வாளர்கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜோதிடர் அருணாசலம் அனைவரையும் வரவேற்றார். இதில் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ஜான்கணேஷ், பாரதி அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், தமிழாசிரியர்கள் முருகசரஸ்வதி, சசிகலா ஆகியோர் சிறப்பிடம் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர்.

இதில் ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், ஆறுமுகம், தினேஷ் பாலாஜி, அருள் ஜெயராஜ், உள்பட மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory