» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கார் மோதி வாலிபர் காயம் : டிரைவர் கைது!
செவ்வாய் 11, ஜூன் 2024 10:36:53 AM (IST)
தூத்துக்குடியில் உணவத்திற்குள் கார் புகுந்த விபத்தில் இளைஞர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் இசக்கிராஜா மகன் இசக்கி குமார் (23). இவர் அப்பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் மகன் விக்னேஷ் என்ற விக்கி பாண்டி (25) என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று அவர் போதையில் ஓட்டிவந்த கார் இசக்கி குமாரின் டிபன் சென்டரில் மோதியதாம். இதில் பலத்த காயம் அடைந்த இசக்கி குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) பிரேம் ஆனந்த் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விக்னேஷ் என்ற விக்கி பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் பங்க்கில் தூத்துக்குடி காசாளர் அடித்துக் கொலை: லாரி டிரைவர்கள் 2 பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 8:44:10 AM (IST)

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 25, மார்ச் 2025 8:40:11 AM (IST)

விவசாயி வீட்டில் புகுந்து ஆடு, கோழிகள் திருட்டு : 3 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:37:38 AM (IST)

கோவிலில் நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
செவ்வாய் 25, மார்ச் 2025 8:34:54 AM (IST)

தூத்துக்குடியில் 2½ கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 8:25:14 AM (IST)

திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் இடமாற்றம் : பக்தர்கள் வரவேற்பு
செவ்வாய் 25, மார்ச் 2025 8:18:42 AM (IST)
