» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவர்களுக்கான ஆதாா் முகாம்: அமைச்சர் ஆய்வு

செவ்வாய் 11, ஜூன் 2024 8:11:19 AM (IST)தூத்துக்குடியில் மாணவர்களுக்கான ஆதார் முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். 

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சாா்பில், தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்-மாணவிகளுக்கான ஆதாா் பதிவு முகாமை சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் துவக்கி வைத்து ஆய்வு செய்தார். முன்னதாக சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியருக்கு புத்தகங்களை அமைச்சர் வழங்கினார். 

இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி, பள்ளித் தலைமையாசிரியா் பொ்சியா ஞானமணி, திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital


Thoothukudi Business Directory