» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை!
திங்கள் 10, ஜூன் 2024 5:15:36 PM (IST)
குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலில் எந்த அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படுவது 'கள்ளக்கடல்' எச்சரிக்கையாகும். குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்ட கடலோர மாவட்டங்களுக்கு இந்திய கடல்சார் தகவல் மையம் கள்ளக்கடல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் நாளை 11.06.2024 செவ்வாய் இரவு 11:30 மணி வரை இராமநாதபுரத்தில் 10 அடி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லையில் 9 மீட்டர் உயரம் வரை அலை எழும்பக் கூடும் என்பதால் கடலோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.