» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை ஜூன் 13 வரை நீட்டிப்பு : ஆட்சியர் தகவல்!

திங்கள் 10, ஜூன் 2024 4:29:31 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2024-ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூன் 13வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2024-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி 07.06.2024 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 13.06.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யவேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தூத்துக்குடி, கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையம், வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள சேர்க்கை மையங்களின் பட்டியல் மற்றும் தொழிற் பிரிவுகள் விவரம் மேற்குறித்த இணையதளமுகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு/2021-ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பின் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்

விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50/-விண்ணப்பதாரர் Debit Card/Credit Card/Net Banking  / G-Payவாயிலாக மட்டுமே செலுத்தவேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசிநாள்: 13.06.2024

மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைபட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசிதேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் 8-ஆம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு நகல்களுடன் தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்திலுள்ள தூத்துக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலையம் (0461-2340133);, வேப்பலோடை(0461-2267300), திருச்செந்தூர் (04639-242253) மற்றும் நாகலாபுரம்(9080585078) மற்றும் தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்திற்கு(0461-2340041) நேரில் வந்தும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750/- கட்டணமில்லா பஸ் பாஸ், இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்குத் தேவையான விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுவதாகவும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கு இலவச உண்டி, உறைவிட வசதியும் உள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,   தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory