» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது: மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!

திங்கள் 10, ஜூன் 2024 4:15:30 PM (IST)தூத்துக்குடியில் புதிய கல்வி ஆண்டிற்காக  பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியின் குழந்தைகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையானது உயர்ந்து வருகின்றது. அதனை கருத்தில் கொண்டு நடைபெற்ற முடிந்த புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்களையும் செப்பனிடப்பட்டு வரும் பழைய பள்ளி கட்டிடப் பணிகளையும் அந்தப் பள்ளியில் நடைபெற்று வரும் புதிய மாணவர் சேர்க்கையினையும் பார்வையிட்டேன் என்றார். 

திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, தலைமை ஆசிரியர் எமல்டா வெலன்சியா, மாமன்ற உறுப்பினர்கள் பாப்பாத்தி அம்மாள், முத்துமாரி, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பாலன், முன்னாள் மாமன்ற உறுப்பினரும் முன்னாள் வட்ட கழக செயலாளருமான இசக்கிமுத்து, முன்னாள் மாநகர விவசாய அணி அமைப்பாளர் ஆவுடையப்பன், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital


Thoothukudi Business Directory