» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சிக்னல் பகுதிகளில் பசுமை பந்தல் : வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

வியாழன் 9, மே 2024 11:04:43 AM (IST)



தூத்துக்குடியில் போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தூத்துக்குடியில் தற்போது கோடை வெயில் கடுமையாக உள்ளது. நண்பகல் நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது வெப்ப அலை வீசுகிறது. வெயில் அதிகம் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து தூத்துக்குடியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து பரிந்துரையின் பேரில் மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் உத்தரவின் பேரில் மாநகராட்சி சார்பில் விவிடி சந்திப்பு, காய்கறி மார்க்கெட், குரூஸ் பர்னாந்து சிலை அருகில் உள்ள சிக்னல் பகுதிகளில் பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் வெயிலின் தாக்கத்தை உணர்ந்து சிக்னல் விளக்கு வழிகாட்டும் வரை அந்த இடத்தில் நின்று இளைப்பாறி செல்கின்றனர். காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


மக்கள் கருத்து

TN69மே 11, 2024 - 10:10:25 PM | Posted IP 162.1*****

Waste signals in that place. Creating unwanted traffic jam

TN69மே 11, 2024 - 10:10:05 PM | Posted IP 172.7*****

Waste signals in that place. Creating unwanted traffic jam

Thiravirajமே 10, 2024 - 10:03:52 AM | Posted IP 162.1*****

Good initiative

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory