» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை 3 மையங்களில் நீட் தேர்வு: 2,128பேர் தேர்வு எழுத உள்ளனர்!

சனி 4, மே 2024 11:35:35 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 3 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. 2128பேர் தேர்வு எழுத உள்ளனர். 

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான 'நீட்' தேர்வை நாளை (5ம் தேதி) தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இத்தேர்வுக்கான விண்ணப்பதிவு பிப்., 9ல் துவங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 3 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி அழகர் பப்ளிக் பள்ளியில் 768பேரும், ஆறுமுகநேரி கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் 500பேரும், திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 960பேர் என மொத்தம் 2128பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீட் தகுதித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.20 மணி வரை மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும்.தோ்வுக்கான முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்படும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வாயிலாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory