» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு ஆணைகள் வழங்கும் விழா!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 5:34:39 PM (IST)



தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

அகில இந்திய அளவிலும் தென் தமிழகத்திலேயே அதிநவீன கட்டமைப்பு வசதியுடன் 20க்கும் மேற்பட்ட நவீன ஆய்வகங்களுடன் தூத்துக்குடி செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்வியாண்டு இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் 100 சதவீத வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரிக்கு பெருமை தரக்கூடிய ஜூப்ளண்ட் விழா ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமையில் நடைபெற்றது. 

தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு கலந்துகொண்டார். விழாவில், கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், இயக்குநர்கள் (மாணவர் சேர்க்கை) ஜான்கென்னடி, ஸ்காட் கலை கல்லூரி முதல்வர் முகமது சாதிக், திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு துறை இயக்குநர் ரவிசங்கர், இயக்குனர் ஜார்ஜ் கிளின்டன் வேலைவாய்ப்பு அதிகாரி ரீகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதனையடுத்து ஸ்காட் கல்வி குழுமங்களின் நிறுவனர் கிளிட்டஸ் பாபு, ஸ்காட் கல்வி குழும தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களையும், பெற்றோர்களையும் கெளரவப்படுத்தி, அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சர்வதேச அளவில் புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பணி நியமனங்களை வழங்கினர். 

இதயனையடுத்து, நிறுவனர் கிளிட்டஸ் பாபு பேசுகையில், இந்த வேலைவாய்ப்பு பெற்றதன் மூலம் மாணவ செல்வங்கள் சிறந்த எதிர்காலத்தை அடைந்திருக்கிறார்கள். உங்களது பணியை திறம்பட செய்து மென்மேலும் சிறந்து விளங்கி, கல்லூரிக்கு பெருமை தேடி தர வேண்டும். இதற்காக உங்களது பெற்றோர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். உங்கள் பணியில் திறமையை நிருபிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தற்போது அதிக பட்சமாக ஆண்டுக்கு 10 லட்சம் வருமானத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. வேலைவாய்ப்பு கிடைத்த மாணவர்கள் தங்களது கருத்துக்களையும், நிர்வாகத்தையும் மனமார பாராட்டினர். கல்லூரி ஆசிரியர்கள் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான பயிற்சிகளை தினசரி பாடத் திட்டங்களுடன் நடத்தி வருவதால் 100 சதவீதம் இந்த ஆண்டு 250 வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகள் மூலம் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் கல்லூரிக்கே வருகை தந்து வளாகத்தேர்வு நடத்தி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளார்கள். அதிகபட்சமாக ஆண்டுக்கு 10 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கி, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கிய கல்லூரி நிர்வாகத்திற்கு விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர் பின்பு நிர்வாக அதிகாரி விக்னேஷ் நன்றியுரையாற்றினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் முத்துகிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் செய்து இருந்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory