» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் : அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 3:22:31 PM (IST)



நாசரேத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் கோடை காலத்தில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் வகையில் நாசரேத்தில்  நகர திமுக சார்பில் கே.வி. கே. சாமி சிலை பஜார் அருகில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தண்ணீர் பந்தலை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழ ஜூஸ், பழ வகைகள், நீர், மோர் ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்வில் திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் இராமஜெயம், வழக்கறிஞர் கிருபாகரன், நாசரேத் நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன், பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் ரவி செல்வக்குமார், மாமல்லன், பேரூராட்சி துணைத் தலைவர் அருண் சாமுவேல், வார்டு கவுன்சிலர்கள் அதிசயமணி நல்லதுரை, திமுக மாவட்ட பிரதிநிதிகள் முருகத்துரை, அன்பு தங்கபாண்டியன், நகர அவைத் தலைவர் கருத்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory