» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணை தாக்கியவருக்கு 6 வருடம் சிறைத் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 5:53:42 PM (IST)

குளச்சல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 6 வருடம் சிறைத்தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பாலப்பள்ளம் குன்னன்விளையை சேர்ந்தவர் ராஜன்(55). இவர் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி (51). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்த ஆசீர் நேசராஜன் (60) கடந்த 30 - 9 -2008 அன்று மேரி ஸ்டெல்லாவிடம் 'நீதானே என் வீட்டு காம்பவுண்டு சுவரை சேதப்படுத்தினாய்? '

கேட்டவாறு தகாத வார்த்தையால் திட்டியதுடன், வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து மேரி ஸ்டெல்லாவை தாக்கி மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மேரி ஸ்டெல்லா இரும்பிலியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து மேரி ஸ்டெல்லா குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆசீர் நேசராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு சுமார் 16 வருடங்களாக இரணியல் கோர்ட்டில் நடந்து வந்தது. 

இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் அமீர்தீன் நேற்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் ஆசீர் நேசராஜனுக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ₹.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே ஆசீர் நேசராஜன் 7 மாதங்கள் சிறையிலிருந்ததால், அந்த 7 மாதங்கள் கழித்து மீதி வருடங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறினார். இந்த வழக்கில் 6 வருடம் சிறைத்தண்டனை பெற்ற ஆசீர் நேசராஜன் மீது குளச்சல் காவல் நிலையத்தில் 21 வழக்குகள் உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory