» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிவன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்: தூத்துக்குடியில் கோலாகலம்

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 11:23:46 AM (IST)



தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்புப் பூஜைகள், சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா நடைபெறுகிறது.


திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக காலை 7 மணிக்கு அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் மற்றும் விநாயகர் - முருகப் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன் பின்பு சிறிய தேரில் விநாயகரும் முருகப் பெருமானும், பெரிய தேரில் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடன் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரரும் எளுந்தருளினர். தொடர்ந்து காலை 10 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. 

கீழ ரத வீதியில் இருந்து தொடங்கிய தேரோட்டத்தை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தேருக்கு முன்பாக ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை, ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், தப்பாட்டம், சிவகைலாய சிவபூதகண வாத்தியங்களுடன், மகளிர் கோலாட்டம் மற்றும் தேவார இன்னிசையுடன் வேதபாராயணம் பாட, சிலம்பாட்டம் வானவேடிக்கையுடன் மாணவ, மாணவியரின் வீர விளையாட்டுகளுடன் நடந்தது. 



தேரோட்டத்தில் கோவில் இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோட்டுராஜா, அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அறங்காவலர்கள் ஆறுமுகம், சாந்தி ஜெயலட்சுமி, முருகேஸ்வரி, மந்திர மூர்த்தி, தொழிலதிபர்கள் ஜெயராமன், டிஏ தெய்வநாயகம், அபிராமி சந்திரசேகர், சுப்புராஜ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, திலகராஜ், அன்னலட்சுமி, கோட்டு ராஜா, கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், கீதா, முருகேசன், சோமநாதன், நெல்லையப்பன், சந்தன ராஜ், கோபால், மாரியப்பன், கல்யாண சுந்தரம், முத்துக்குமாரசாமி உள்பட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். 

பூஜைகளை கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சண்முகம் சங்கர், குமார், சோமநாதன் ஆகியோர் நடத்தினர். தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி சைபர் கிரைம் ஏடிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


மக்கள் கருத்து

Om NamashivayaApr 24, 2024 - 01:30:19 PM | Posted IP 162.1*****

Om Namashivaya

Local HolidayApr 24, 2024 - 01:29:48 PM | Posted IP 162.1*****

Thootjukudiku mattum local holiday vitrukalam....

TN69Apr 24, 2024 - 08:20:23 AM | Posted IP 172.7*****

OLS function only local holiday.

m.sundaramApr 23, 2024 - 08:32:46 PM | Posted IP 162.1*****

No need for local holiday.

சுப்பிரமணியன்Apr 23, 2024 - 05:54:39 PM | Posted IP 162.1*****

அனைத்து நிகழ்வுகளும் அருமையாக இயுக் இருந்தது. அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். சகா கலை குழு நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது.

tamilanApr 23, 2024 - 12:16:04 PM | Posted IP 172.7*****

அமைச்சர், மேயர் கலந்து கொண்டதற்கு நன்றி. தூத்துக்குடி நகர் பகுதி மட்டும் உள்ளூர் விடுமுறை கொடுத்து இருக்கலாம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory