» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தையை வெட்டிக் கொலை செய்த சிறுவன் கைது : தூத்துக்குடியில் பயங்கரம்!!

திங்கள் 22, ஏப்ரல் 2024 9:59:55 AM (IST)

தூத்துக்குடியில் தாயை துன்புறுத்தியதால் தந்தையை 15 வயது மகன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி செல்சினி காலனியைச் சேர்ந்தவர் அழகுதுரை மகன் சத்திய மூர்த்தி (36).  சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுசியா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சத்திய மூர்த்தி தினமும் மது அருந்திவிட்டு தனது மனைவி அனுசுயாவை அடித்து துன்புறுத்துவதுடன் குழந்தைகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த அவர், மனைவியை அடித்து துன்புறுத்தினாராம். இதனால் ஆத்திரமடைந்த அவரது மூத்த மகனான 14 வயது சிறுவன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து தந்தையை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து, கொலை செய்யப்பட்டவரின் மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மது போதையில் தாயை துன்புறுத்தியதால் ஆத்திரமடைந்து சிறுவன் தந்தையை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

JOHNApr 22, 2024 - 10:10:49 PM | Posted IP 162.1*****

TASMAC ADMK PEROID IL VANDATHU / ADMK DMK WASTE

தமிழன்Apr 22, 2024 - 10:00:22 PM | Posted IP 162.1*****

திராவிட குடும்ப அரசின் டாஸ்மாக் தான் எல்லாத்துக்கும் முக்கிய காரணம். வெட்டவேண்டியது உன் தந்தையை அல்ல, திராவிட டாஸ்மாக் அரசியல்வாதிகளை தான்.

m.sundaramApr 22, 2024 - 07:19:04 PM | Posted IP 162.1*****

Diradiva Model Gindabad. Due to TASMAC many murder, friction in family life and more are happening. Govt is running with the income of TASMAC.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory