» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாம் : மாரீஸ்வரன் தொடங்கி வைத்தார்!

சனி 20, ஏப்ரல் 2024 5:36:55 PM (IST)



கோவில்பட்டியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 14 நாள் கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாமை இந்திய ஹாக்கி அணி வீரர் மாரீஸ்வரன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் சார்பாக கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் வ.உ.சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 14 நாள்கள் நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய ஹாக்கி அணி வீரர் மாரீஸ்வரன் கலந்து கொண்டு பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார்.

மேலும் முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு அவர் ஹாக்கி விளையாட்டு நுணுக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார். மே மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பயிற்சி முகாமில் முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் முகமது ரியாஸ், அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கின்றனர்.

பயிற்சி முகாம் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தினமும் காலையும் மாலையும் பால், முட்டை வாழைப்பழம், முளைத்த பயிர் ஆகியவை வழங்கப்படும் முன்னாள் இந்திய வீரர்கள் முகமது ரியாஸ், அஸ்வின் ஆகியோரும் பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். 

தோல்வியில் இருந்து மீள்வது எப்படி என்பதை பற்றி வீரர்களுக்கு மனநல நிபுணர் பாலாஜி தலைமையில் வகுப்பு நடைபெறவுள்ளது. பயிற்சியாளர்களாக மகேஷ் குமார், பிரேம்குமார், விபின் காந்த், கௌதமன் பயிற்சி அளிக்க இருக்கிறார்கள் இறுதி நாளன்று பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது

பயிற்சி முகாம் துவக்க விழாவில் ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குருசித்திர சண்முகபாரதி, பொருளாளர் காளிமுத்துபாண்டிராஜா, ராஜீவ் காந்தி விளையாட்டு கழக துணைச் செயலாளர் வேல்முருகன், மூத்த வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ்குமார், மோகன், காளிதாஸ், தனசேகரன், மாசாணம் , மாயாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory