» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆர்டிஐ தகவல் தர மறுத்த சார்பதிவாளருக்கு ரூ.25 அபராதம் : மாநில ஆணையம் உத்தரவு!

சனி 20, ஏப்ரல் 2024 3:24:53 PM (IST)



கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற சர்வேயருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் தர மறுத்த சார்பதிவாளருக்கு ரூ.25 அபராதம் விதித்து தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. ஓய்வு பெற்ற அரசு சர்வேயர். இவரது தந்தை சுப்பையா பெயரில் அய்யநேரி ஊராட்சிக்குட்பட்ட சுபா நகரில் உள்ள நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்ற வழக்கிற்கு சில ஆவணங்கள் தேவைப்பட்டதால். தனது தந்தை நிலம் தொடர்பாக கடந்த 7.12.2020ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 6 (1) கீழ் சில தகவல்களை குருசாமி மாவட்ட பதிவாளரிடம் கேட்டார். 

குருசாமி கேட்ட கேள்விகளுக்கு பிரிவு 6(3)கீழ் பதில் அளிக்குமாறு கோவில்பட்டி சார் பதிவாளருக்கு பரிந்துரை செய்கிறார். ஆனால் அப்போது கோவில்பட்டி சார்பதிவாளராக இருந்த பாஸ்கரன், குருசாமி கேட்ட கேள்விகளுக்கு பதிலாக மாறுபட்ட பதிலை தந்த காரணத்தினால் குருசாமி மாவட்ட பதிவாளருக்கு பிரிவு 19(1)கீழ் மேல் முறையீடு செய்தார். ஆனால் எவ்வித பதிலும் வரவில்லை என்பதால் கடந்த 12.04.2021 அன்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் பிரிவு 18(1)கீழ் புகார் செய்தார்.

இந்த புகார் தொடர்பாக கடந்த 03.04.2024 சென்னையில் விசாரணை நடத்திய ஆணையம், குருசாமிக்கு சரியான தகவல் தர மறுத்த அப்போதைய கோவில்பட்டி சார்பதிவாளரும், பொது தகவல் அலுவலருமான பாஸ்கரனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது மட்டுமின்றி, அந்த தொகையை பாஸ்கரனிடம் வசூலித்து குருசாமியிடம் கொடுக்கும்படி உத்தரவிட்டது 

இதையடுத்து தற்பொழுதைய கோவில்பட்டி சார் பதிவாளர் சூசை ஜேசுதாஸ், பாஸ்கரனிடம் வசூலித்த ரூ.25 ஆயிரத்திற்கான வரைவோலையை (டி,டி) குருசாமியிடம் வழங்கினார். தான் கேட்ட தகவலை தனக்கு சரியான நேரத்தில் வழங்கி இருந்தால் நீதிமன்றத்தில் இருக்கும் முடிந்து தனது இடப்பிரச்சினை முடிவடைந்து இருக்கும் , இதனால் தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்ட தாகவும், இனியாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கும் கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குருசாமி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

m.sundaramApr 20, 2024 - 08:37:36 PM | Posted IP 172.7*****

Very good verdict. It is to be followed in all cases.

கே.கணேசன்.Apr 20, 2024 - 08:00:51 PM | Posted IP 172.7*****

அருமையான அவசியமான விடா முயற்சியின் பலன். நன்று. மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🌹🙏💐

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory