» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதியில் 59.66% வாக்குப்பதிவு : நள்ளிரவில் மாற்றிய தேர்தல் ஆணையம்!

சனி 20, ஏப்ரல் 2024 10:53:04 AM (IST)

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 59.66% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, அமைதியான முறையில் நடந்து முடிந்தது. சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுதடைந்ததாக புகார் எழுந்தது; அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன. சலசலப்புகள், வாக்குவாதங்கள் தவிர்த்து அசம்பாவிதம் ஏதுமின்றி தேர்தல் நடந்து முடிந்தது. 

தூத்துக்குடி தொகுதியில் இரவு 8 மணி வரை 70 சதவீத வாக்கு பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் நள்ளிரவில் அதனை மாற்றி,59.66% சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவானதாக அறிவித்துள்ளது. விளவங்கோடு இடைத்தேர்தலில் 65.40% ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.




மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory