» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விஜய் நடித்துள்ள கில்லி படம் மறு வெளியீடு : த.வெ.க. நிர்வாகிகள் உற்சாகம்!!

சனி 20, ஏப்ரல் 2024 10:16:48 AM (IST)



தூத்துக்குடியில் விஜய் நடித்துள்ள கில்லி படத்தின் மறு வெளியீட்டை தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கண்டு ரசித்தனர். 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தொழில்நுட்ப முறையில் இன்று மீண்டும் திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள 4 திரையரங்குகளில் கில்லி திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

தமிழக வெற்றி கழக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அஜிதா அக்னல் தலைமை தாங்கினார். பாலகிருஷ்ணா திரையரங்கு உரிமையாளர் ராமையா முன்னிலை வைத்தார். இதில் 20 ஆண்டுகள் பிறகு கில்லி திரைப்படம் வெளியிடுவது தொடர்ந்து 20 கிலோ கேக் வெட்டி ரசிகர்களுக்கு வழங்கினர். பின்னர் ரசிகர்கள் கில்லி திரைப்படத்தை உற்சாகமாக கண்டு களித்தனர்.‌



20 ஆண்டுகளுக்குப் பிறகு கிள்ளி திரைப்படம் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் வரும் 2026 யில் தலைவர் விஜயை அரியணையில் ஏற்றோம் என தமிழக வெற்றி கழக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அஜிதா அக்னல் தெரிவித்தார். முன்னதாக சிலம்பாட்டம், பறை இசை முழங்க தியேட்டர் முன்பு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

Meenakshi SundaramApr 20, 2024 - 11:13:27 AM | Posted IP 172.7*****

தமிழகவெற்றிக்கழக தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் திருமதி.அஜிதா ஆக்னல் M.sc B.Ed வாழ்த்துகள்

Subbaiah kannanApr 20, 2024 - 11:11:27 AM | Posted IP 162.1*****

வாழ்க வாழ்க தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் திருமதி.அஜிதா ஆக்னல் M.sc B.Ed

மாரிமுத்துApr 20, 2024 - 11:08:30 AM | Posted IP 172.7*****

தளபதி2026இல் முதல்வர் ஆவது உறுதி..அக்கா அஜிதா அவர்கள் பணி சிறக்கட்டும்..

RoshanApr 20, 2024 - 11:01:39 AM | Posted IP 162.1*****

வாழ்த்துகள் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் திருமதி.அஜிதா ஆக்னல் M.sc B.Ed 🙏

RoshanApr 20, 2024 - 10:59:05 AM | Posted IP 172.7*****

வாழ்த்துகள் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் திருமதி.அஜிதா ஆக்னல் M.sc B.Ed

Beno FernandoApr 20, 2024 - 10:58:25 AM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள் திருமதி அஜிதா்ஆக்னல் அவர்களுக்கு மற்றும் உறுப்பினர்களுக்கு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory