» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதியில் 70% வாக்குப்பதிவு

சனி 20, ஏப்ரல் 2024 8:36:41 AM (IST)

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இரவு 8 மணி வரை டோக்கன் முறையில் வாக்குப்பதிவு நடந்தது. 70 சதவீதம் வாக்குகள் பதிவானது. 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். காலை முதல் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் வாக்குப்பதிவு சதவீதம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி காலை 9 மணி நிலவரப்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 10.22 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில், விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதியில் 12.25, தூத்துக்குடி 9.62, திருச்செந்தூர் 11.30, ஸ்ரீவைகுண்டம் 9.71, ஓட்டப்பிடாரம் 7.59, கோவில்பட்டி தொகுதியில் 11.19 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. காலை 11 மணி நிலவரப்படி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 23.88 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில், விளாத்திகுளம் தொகுதியில் 27.42, தூத்துக்குடி 22.87, திருச்செந்தூர் 25.34, ஸ்ரீவைகுண்டம் 24.07, ஓட்டப்பிடாரம் 23.41, கோவில்பட்டி 21 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

மதியம் 1 மணி நிலவரப்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 39.11 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதில் விளாத்திகுளம் தொகுதியில் 43.51, தூத்துக்குடி 37.35, திருச்செந்தூர் 39.63, ஸ்ரீவைகுண்டம் 38.49, ஓட்டப்பிடாரம் 37.49, கோவில்பட்டி 38.05 சதவீதம் வாக்குகள் பதிவானது. மாலை 3 மணி நிலவரப்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 49.38 சதவீத வாக்குகள் பதிவானது. 

இதில், விளாத்திகுளம் தொகுதியில் 52.32, தூத்துக்குடி 46.51, திருச்செந்தூர் 50.41, ஸ்ரீவைகுண்டம் 49.61, ஓட்டப்பிடாரம் 46.45, கோவில்பட்டி 49.30 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை 5 மணி நிலவரப்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 59.96 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் விளாத்திகுளம் தொகுதியில் 66.89, தூத்துக்குடி 55.26, திருச்செந்தூர் 62.70, ஸ்ரீவைகுண்டம் 56, ஓட்டப்பிடாரம் 61.18, கோவில்பட்டி 59.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

5 மணிக்கு பிறகு விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. 6 மணிக்கு வாக்குச்சாவடியில் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு கடைசியில் இருந்து டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. 

அதன்படி விளாத்திகுளம் தொகுதியில் 3 வாக்குச்சாவடிகளிலும், தூத்துக்குடியில் 5 வாக்குச்சாவடிகளிலும், திருச்செந்தூரில் 3 வாக்குச் சாவடிகளிலும், ஸ்ரீவைகுண்டத்தில் 5 வாக்குச் சாவடிகளிலும், ஓட்டப்பிடாரத்தில் 9 வாக்குச்சாவடிகளிலும், கோவில்பட்டியில் 3 வாக்குச்சாவடிகளிலும் ஆக மொத்தம் 28 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களித்தனர். இரவு 8 மணி வரை 70 சதவீத வாக்கு பதிவாகியது. அதன் பிறகும் வாக்குப்பதிவு நீடித்தது.

வாக்குப்பதிவுக்கு பிறகு அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும், தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory