» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கள்ள ஓட்டு போட வந்தவர்களை சிறைபிடித்த கிராம மக்கள் : பொட்டலூரணியில் பரபரப்பு!!

வெள்ளி 19, ஏப்ரல் 2024 4:09:22 PM (IST)



தூத்துக்குடி அருகே பொட்டலூரணியில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் கள்ள ஓட்டு போட காரில் வந்தவர்களை சிறைபிடித்து தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராமத்தில் கிராம மக்கள் மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி இன்று தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம மக்கள் கண்மாய் கரையில் அமர்ந்து அங்கேயே மதிய உணவு சமைத்து சாப்பிட்டு கருப்பு கொடி ஏற்றி  தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்திற்குள் ஸ்கார்பியோ காரில் வந்த ஒரு கும்பல் கள்ள ஓட்டு போட முயன்றுள்ளது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் கள்ள ஓட்டு போட வந்தவர்களை பிடித்து ஒரு வேனில் அழைத்து சென்றனர். 

அப்போது கிராம மக்கள் வேனை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஸ்கார்பியோ காரையும் சிறை பிடித்தனர். மேலும் அந்த காரில்  மதுபான பாட்டில்கள் கத்தி, அருவாள், கம்பு இருந்ததாக கூறப்படுகிறது.  வேன் மற்றும் ஸ்கார்பியோ காரை சுற்றி கிராம மக்கள் நூற்றுக்கணக்கான போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வேனின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் கள்ள ஓட்டு போட வந்தவர்களை அழைத்துச் சென்றனர்.

அமைச்சரை திருப்பி அனுப்பிய மக்கள் : 



முன்னதாக கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த தமிழக மீனவ துறை அமைச்சர்  அனிதா ராதாகிருஷ்ணனை கிராம மக்கள் திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.  


மக்கள் கருத்து

SaminathanApr 19, 2024 - 08:14:17 PM | Posted IP 172.7*****

இதுதான் விடியல் ஆட்சி

m.sundaramApr 19, 2024 - 05:55:53 PM | Posted IP 162.1*****

That is good. This is the power of the people, for the people and by the people.Congrautulation to these people.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory