» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஜி.எச்., அருகே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு... உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 11, ஏப்ரல் 2024 8:46:33 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா அய்யனாரூத்து பகுதியைச் சேர்ந்த மொட்டையசாமி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், சமீபத்தில் நானும் எனது உறவினரும் காரில் தூத்துக்குடிக்கு சென்றோம். அப்போது எனது உறவினருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவரை காரில் அழைத்து சென்றோம். அங்கு மருத்துவமனை நுழைவாயிலில் பல்வேறு கடைகள் ஆக்கிரமித்து இருந்தது.

இதனால் மருத்துவமனைக்குள் அவசரமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை ஊழியர்களை ஸ்டெச்சரை எடுத்து வரச்சொல்லி எனது உறவினரை மருத்துவமனைக்குள் அழைத்து சென்று, உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றினோம். என்னை போல ஏராளமானவர்கள் உயிருக்கு போராடியவர்களை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

ஆனால் மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள ஆக்கிரமிப்புகளால் நோயாளிகள் அவதிப்படும் நிலைதான் உள்ளது. எனவே இதுபோன்ற நிலையை தவிர்க்க, தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவசரமாக வரும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட அரசு அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory