» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை, தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் : பயணத்திட்டம் வெளியீடு!

புதன் 10, ஏப்ரல் 2024 8:12:48 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி குமரி மாவட்டங்களில், 'இந்தியா கூட்டணி' வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞர் அணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.

2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக இளைஞர் அணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'இந்தியா கூட்டணி' வேட்பாளர்களை ஆதரித்து, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகிறார். அவரின் 5-வது கட்ட தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி நாளை 11ம் தேதி வியாழக்கிழமை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை தென்காசி, தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்கிறார். 13ஆம் தேதி சனிக்கிழமை திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். 



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory