» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழைக் காலங்களில் தீவாக மாறும் கிராமம் : கருப்புகொடி ஏந்தி மக்கள் போராட்டம்!

புதன் 10, ஏப்ரல் 2024 5:20:50 PM (IST)



கோவில்பட்டி அருகே  ரயில்வே சுரங்க பாலத்திற்கு பதிலாக நிரந்தரமாக மாற்றுப்பாதை அமைத்து தர வலியுறுத்தி ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி சங்காரப்பேரி என்ற கோடாங்கால் கிராமம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் வழியாக சென்ற ரயில்வே பாதையின் ஒரு பகுதியில் ரயில்வே சுரங்க பாலம் அமைக்கப்பட்டது.  தங்களுக்கு ரயில்வே சுரங்க பாலம் தேவையில்லை. 

மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும் என்று அப்போது அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதையும் மீறி அங்குள்ள கண்மாய் அருகே ரயில்வே சுரங்க பாலம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மழையின் போதும் ரயில்வே சுரங்கப்பா காலத்தில் மழைநீர் தேங்கி ‌ பல மாதங்கள் அந்த கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளிவர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலை இருந்து வருகிறது‌. 

விவசாய நிலங்கள் வழியாக நடந்து தான் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. ரயில்வே சுரங்க பாலம் அருகே கண்மாய் இருப்பதால் நீரூற்று ஏற்பட்டு எப்போதும் சுரங்க பாலத்தில் தண்ணீர் இருக்கக் கூடிய நிலை உள்ளது. இதனால் அதை சுரங்க பாலத்தின் அடிப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

அது மட்டுமின்றி அந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க சிதலமடைந்து காணப்படுவது மட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சுத்தம் செய்யப்படவில்லை என்பதால் அந்த குடிநீரை குடித்த பலருக்கும் பல விதமான நோய்கள் ஏற்பட்டு சிலர் உயிரிழந்திருப்பதாகவும்,  பலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே ரயில்வே சுரங்க பாலத்திற்கு பதிலாக நிரந்தரமாக மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும், புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்திட வேண்டும், சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். பேருந்து நிறுத்தம் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த கிராம மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளனர். 

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து ஏமாற்றி வரும் அரசினையும் அரசு அதிகாரிகளும் கண்டித்து ஊர் முழுவதும் கருப்புக்கொடி கட்டப்பட்டுள்ளது.ஒவ்வொரு தேர்தலின் போதும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசியல் கட்சியினர் கூறுகின்றனர், அதன் பின்னர் யார் மீது வருவதில்லை. 

மழைக் காலங்களில் ரயில்வே சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கி தங்களது கிராமம் ஒரு தீவு போல மாறி விடுவதாகவும், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை, கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படாமல் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும், இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்க கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார். 

ஆனால் தற்போது வரை சாலை வந்தபாடில்லை, எனவே இந்த முறை கிராமம் முழுவதும் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. தேர்தலை புறக்கணிப்பதில் உறுதியாக இருப்பதாக அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.


மக்கள் கருத்து

Selvakumar GApr 10, 2024 - 06:40:59 PM | Posted IP 172.7*****

எங்களுடைய இந்த தேர்தல் புறக்கணிப்பு வரும் அனைத்து தேர்தலிலும் புறக்கணிப்பாகத் தான் இருக்கும் எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory