» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

புதன் 10, ஏப்ரல் 2024 4:33:55 PM (IST)



தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜோன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில்  மருத்துவர் ரொவீனா ரூத் ஜோன் போட்டியிடுகிறார். தனக்கு 'மைக்' (ஒலிவாங்கி) சின்னத்தில் வாக்குகள் கேட்டு, பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இன்று (புதன்கிழமை) காலை தூத்துக்குடியை அடுத்துள்ள முத்தையாபுரத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாக, நாம் தமிழர் கட்சியினருடன் உறுதி மொழி எடுத்து கொண்டார்.

அதனை தொடர்ந்து, முள்ளக்காடு மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட அத்திமரப்பட்டி, பொட்டல்காடு, குலையன்கரிசல், கூட்டாம்புளி, சிறுப்பாடு, புதுக்கோட்டை, கூட்டாம்புளி ஆகிய ஊர்களுக்கு சென்று தனக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களை கேட்டு கொண்டார். பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் ராஜசேகரன், மத்திய மாவட்ட செயலாளர் வே.வேல்ராஜ், மாநில இளைஞர் பாசறை மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory