» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கனிமொழி எம்.பி. வாகனத்தில் பறக்கும் படையினர் மீண்டும் சோதனை

திங்கள் 8, ஏப்ரல் 2024 8:01:19 AM (IST)



குலசேகரன்பட்டினம் அருகே பிரசாரத்திற்கு சென்ற போது கனிமொழி எம்.பி. வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மீண்டும் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள் வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் நேற்று மீண்டும் கனிமொழி எம்.பி. வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அதாவது, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே மணப்பாடு பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக கனிமொழி எம்.பி. தனது பிரசார வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். குலசேகரன்பட்டினம் சோதனை சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த கனிமொழி எம்.பி. வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.சோதனையின்போது, பெண் போலீசாரிடம் கனிமொழி எம்.பி. தனது கைப்பையை திறந்து காண்பித்தார். பின்னர் பிரசார வாகனத்தின் பின்பக்க கதவையும் பறக்கும் படையினர் திறந்து தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம், பரிசுப் பொருட்கள் எதும் இல்லாததால், வாகனத்தை உடனடியாக அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து

இப்படிக்கு கனவு அவர்களேApr 8, 2024 - 11:49:48 AM | Posted IP 162.1*****

அப்படியா. போங்க கனவுல ஓட்டு போட்டு தொலைங்க.

அதுApr 8, 2024 - 09:55:36 AM | Posted IP 162.1*****

கட்டுமரம் அவரு விஞ்ஞான ஊழல் குடும்பம். எதுவும் சிக்காது.

இப்படிக்கு கனவுApr 8, 2024 - 08:48:54 AM | Posted IP 162.1*****

எம்மதமும் சம்மதம்... நானும் இந்து தான் . பிஜேபி வந்தால் ஆபத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory