» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு : பொதுமக்கள் கடும் அவதி!

திங்கள் 8, ஏப்ரல் 2024 7:47:48 AM (IST)

தூத்துக்குடியில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் வெப்பத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் காலை 11 மணிமுதல் மாலை 3 மணிவரை அனல்காற்று வீசுவதால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில் தூத்துக்குடி முத்துநகா் கடற்கரை காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமையில் முத்துநகா் கடற்கரையில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால், வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் முத்துநகா் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory