» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு!
வியாழன் 8, பிப்ரவரி 2024 12:04:30 PM (IST)

தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறைகளின் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் திறனாய்வு தேர்வு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2023ம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியான விண்ணப்பதாரர்களில் முதற்கட்டமாக 470 பேருக்கு 07.02.2024 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு மற்றும் 1500 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது.
இதில் தேர்ச்சியான 303 விண்ணப்பதாரர்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி இன்று 08.02.2024 வியாழக்கிழமை காலை முதல் உடல் திறனாய்வு தேர்வான கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம் ஆகியவை தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஈரோடு சிறப்பு படை காவல்துறை தலைவர் எஸ். முருகன் மேற்பார்வையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடற்கரையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது – 1 கிலோ கஞ்சா பறிமுதல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:06:41 PM (IST)

கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ வேட்பு மனு தாக்கல்
சனி 4, ஏப்ரல் 2026 7:06:36 PM (IST)

வி.வி.டி சிக்னல் பகுதியில் புதிய வடிவமைப்பில் பாலம் : அமைச்சர் கீதாஜீவன் தேர்தல் வாக்குறுதி!
சனி 4, ஏப்ரல் 2026 6:53:22 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி: ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
சனி 4, ஏப்ரல் 2026 5:29:04 PM (IST)

தேர்தலுக்காக வருபவர்களைப் புறக்கணிப்பீர் : தூத்துக்குடியில் கீதா ஜீவன் வாக்கு சேகரிப்பு!
சனி 4, ஏப்ரல் 2026 4:59:47 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.67 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
சனி 4, ஏப்ரல் 2026 4:24:07 PM (IST)







