» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2பேர் படுகொலை

புதன் 30, நவம்பர் 2022 7:42:36 PM (IST)

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கத்துரை மகன் ஜெயக்குமாா்(45). இவருக்கும் குறிஞ்சி நகரைச் சோ்ந்த சரவணன் (29) என்பவருக்கும் இருசக்கர வாகனம் விற்பனை செய்வதில் இன்று மாலை தகராறு ஏற்பட்டதாம். இதில், ஆத்திரமடைந்த சரவணன், ஜெயக்குமாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெயக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் சங்கர், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை ஏஎஸ்பி சந்திஸ் பார்வையிட்டார். 

மற்றொரு கொலை

தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் பெரியநாயகம் (60). எலக்ட்ரீசியன். இவா் பாரதிநகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இன்று மாலை 5 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மா்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

IndianDec 2, 2022 - 03:23:52 PM | Posted IP 162.1*****

Millerpuram Armed Reserve Road not motorable at all. Will Police write letter to the District Administration atleast to make the road motorable.

NameDec 1, 2022 - 01:54:45 AM | Posted IP 162.1*****

Evng railway gate la busya helmet pidichutu irunthangale

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory