» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெட்டிக்கடையில் புகையிலை விற்ற வியாபாரி கைது

வியாழன் 20, ஜனவரி 2022 3:40:36 PM (IST)தூத்துக்குடி அருகே பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, மதுபாட்டில்கள், புகையிலைப் பொருட்கள் விற்பவர்கள் உட்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் குறித்து தீவிர ரோந்துப்பணியை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் புதூர்  சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் போலீசார் புதூர் வ.உ.சி. தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (53),  என்பவர் தனது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.உடனடியாக போலீசார் சீனிவாசனை கைது செய்து அவரிடமிருந்து 1,283 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory