» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்து ராணுவம் என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை: எஸ்பியிடம் புகார்!

திங்கள் 18, அக்டோபர் 2021 3:27:07 PM (IST)



இந்து ராணுவம் என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனநாயக அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுலவகத்தில் அளித்த மனு: அனைத்து மாவட்டங்களிலும் இந்து இராணுவம் உருவாகிறது. தொடர்புக்கு என்று குறிப்பிட்ட செல்போன் எண்கள் வாட்ஸ்அப் குருப்பில் பரப்பபட்டுள்ளது. இதன் மூலம் சமூக ஒற்றுமையை சீர்குலைக்க சதி செய்கிறார்கள். மத துவேசத்தினை தூண்டுகிறார்கள். 

இத்தகைய செயல் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானது. மேலும் இந்திய இராணுவத்தின் மாண்பினை கெடுக்கும் நோக்கிலும் அழிக்கும் நோக்கிலும் உள்ளது. ஜனநாயகத்தை அழிக்கும் நோக்கில் மதரீதியான சர்வாதிகார பாசீசத்தை அரங்கேற்றத் துடிக்கும் நபர்கள் மீதும், தொடர்புடைய நாசகார சக்திகள் மீதும் தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்து, துரித குற்ற நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory