» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கூட்டமாக பிரீபையர் விளையாடிய மாணவர்களுக்கு காவல்துறை அறிவுரை

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 8:05:57 PM (IST)தட்டார்மடத்தில் கூட்டமாக நின்று பிரீ பையர் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை அழைத்து அறிவுரை கூறி காவல் ஆய்வாளர் சாம்சன் ஜெபதாஸ் முகக்கவசம் வழங்கினார்.

தற்போது கரோனா 2ஆம் அலை பரவல் அதிகரித்து வருவதையொட்டி கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பொது முடக்கம் அறிவிக்கபடுமோ ? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். மேலும் அனைத்து பகுதியில் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் பகுதியில் காவல் ஆய்வாளர் சாம்சன்ஜெபதாஸ் தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் அனைவரும் தெருமுனையில் கூடி நின்று கொண்டு செல்பேசியில் பிரீபயர் விளையாடிக்கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு ரோந்து பணிக்காக வந்த காவல் ஆய்வாளர் சாம்சன்ஜெபதாஸ் அங்கு பிரீ பயர் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை அழைத்து செல்லிடபேசியில் பிரீ பையர் விளையாடுவதை விடுத்து நல்ல பயன் உள்ள புத்தகங்களை படிப்பதுடன் சமூக பணிகளில் ஆர்வம் காட்டுங்கள் என அறிவுரை வழங்கி அவர்களுக்கு முககவசம் வழங்கினர். பின்னர் கரோனா பரவலை தடுக்க வீட்டில் இருங்கள்.வெளியே வரும்போது முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesThalir ProductsNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory