» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனின் சொத்துகள் பறிமுதல் : ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 9, பிப்ரவரி 2021 5:13:57 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சுதாகரன்-இளவரசிக்கு சொந்தமான 23 சொந்தமான சொத்துகள் தமிழக அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் 14.2.2017 அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் மாவட்ட ஆட்சியரால் அரசுடமை ஆக்கப்பட்டன. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துகளும் தமிழ்நாடு அரசால் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் கால்வாய், சேரகுளம், வல்லகுளம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 23 சொத்துக்கள் தமிழ்நாடு அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 14.2.17 அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 23 சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா சேரகுளம், வல்லகுளம், கால்வாய், மீரான்குளம் ஆகிய கிராமங்களில் வி.என்.சுதாகரன், ஜெ.இளவரசி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ரிவர்வே அக்ரோ புரோடக்ட்ஸ் பிரைவேட் லிட் என்ற நிறுவனத்தின் பெயரில் உள்ள 23 சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டு உள்ளது.
இந்த சொத்துகளை பறிமுதல் செய்து தமிழ்நாடு அரசின் சொத்து என்று பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் 23 சொத்துகளும் தமிழ்நாடு அரசின் சொத்துகள் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, அந்த சொத்துகளில் இருந்து பெறப்படும் வருவாய் (வாடகை, நிலுவை வாடகை உள்பட) அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு பாத்தியப்பட்டது" என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த சொத்துகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மக்கள் கருத்து
M.sundaramFeb 11, 2021 - 07:24:29 PM | Posted IP 173.2*****
Very good. Like this such properties of other politicians bureaucrats must also be taken over by the Govt other wise it may be declared as political vindictive.What about the properties of Late J. Jeyalalitha and Ms Sashikala ?
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.25ல் இறைச்சி கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:45:46 PM (IST)

முக கவசம் அணியாத 1156 பேருக்கு ரூ.2.31 லட்சம் அபராதம்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:38:38 PM (IST)

தூத்துக்குடியில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்: ஆட்சியர் தகவல்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:28:04 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் கலவரம் வெடிக்கும் : பேராசிரியை பாத்திமா பாபு
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:22:16 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : ரஜினிகாந்த் பதில்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:08:12 PM (IST)

தூத்துக்குடியில் பயிற்சி மையத்தை மூட மாணவிகள் எதிர்ப்பு: மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 4:19:56 PM (IST)

ப. சுகுமார்Feb 12, 2021 - 01:04:30 AM | Posted IP 173.2*****