» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவை சூறையாடிய 'நவுல்' புயல்: 350 விமானங்கள் ரத்து - 7¼ லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!
திங்கள் 27, ஜூலை 2026 8:24:00 AM (IST)

சீனாவில் இந்த ஆண்டு வீசிய புயல்களில் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படும் 'நவுல்' புயல் காரணமாகப் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7.25 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஹுய்டோங் பகுதியில் நவுல் புயல் நேற்று அதிகாலை கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியதுடன், கனமழையும் கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாகக் குவாங்டாங் மாகாணத்தில் மட்டும் 7 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
புயல் பாதிப்பினால் சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் 350 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஹாங்காங் மற்றும் தெற்கு சீனப் பகுதிகளில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியது. மரங்கள் முறிந்து விழுந்ததாலும், கட்டிட இடிபாடுகளாலும் ஹாங்காங்கில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு சீனாவைத் தாக்கிய 12-வது வெப்பமண்டல புயலான நவுல், இம்மாதத்தில் (ஜூலை) மட்டும் தாக்கிய 3-வது புயலாகும். முன்னதாக ஜூலை 3-ஆம் தேதி 'மேசக்' புயலும், ஜூலை 11-ஆம் தேதி 'பாவி' புயலும் சீனாவைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்புயல் சீனாவின் உட்புறப் பகுதிகளான ஜியாங்சி மற்றும் ஹுனான் மாகாணங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், மலைப்பகுதிகள் மற்றும் ஆற்றோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:12:10 AM (IST)

இலங்கை ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பு வழக்கு : உயர் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:15:09 AM (IST)

பாகிஸ்தானில் டிரோன் மூலம் குண்டு வீச்சு: 11 போலீசார் பலி, 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வெள்ளி 31, ஜூலை 2026 12:55:12 PM (IST)

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது சர்வதேசப் பிடிவாரண்ட்: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
புதன் 29, ஜூலை 2026 4:46:39 PM (IST)

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!
புதன் 29, ஜூலை 2026 12:04:25 PM (IST)

ஜெர்மனி ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் திருவிழா: அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மியர் பங்கேற்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:21:10 PM (IST)







