» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஃபீல்ட்ஸ் மெடல்: 100 ஆண்டுகால புதிருக்கு விடை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள் சாதனை!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:02:09 PM (IST)

உலக அளவில் கணிதத் துறையின் மிக உயரிய விருதான 'ஃபீல்ட்ஸ் மெடல்' அமெரிக்காவில் வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 40 வயதுக்குட்பட்ட சிறந்த கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை, முதன்முறையாகச் சீனாவைச் சேர்ந்த இருவர் வென்று சாதனை படைத்துள்ளனர்.
சீனாவைச் சேர்ந்த யு டெங் மற்றும் சீனாவில் பிறந்து அமெரிக்காவில் பணியாற்றி வரும் பெண் விஞ்ஞானி ஹாங் வாங் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.இதன்மூலம், 90 ஆண்டுகால ஃபீல்ட்ஸ் மெடல் விருது வரலாற்றில், இவ்விருதைப் பெறும் 3-வது பெண்மணி என்ற பெருமையை ஹாங் வாங் பெற்றுள்ளார்.
யு டெங்: ஜெர்மனி விஞ்ஞானி டேவிட் ஹில்பர்ட் கடந்த 1900-ஆம் ஆண்டு முன்வைத்த வாயுக்களின் இயக்கம் குறித்த 100 ஆண்டுகாலக் கணித புதிருக்குத் துல்லியமான விடை கண்டு இச்சாதனையைப் படைத்துள்ளார்.
ஹாங் வாங்: கடந்த 1917-ஆம் ஆண்டு ஜப்பான் விஞ்ஞானி சோய்ச்சி ககேயா எழுப்பிய புகழ்பெற்ற கணித புதிருக்கு முப்பரிமாண வடிவில் (3D) புதிய தீர்வு கண்டு உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து, அமெரிக்காவின் ஜான் பார்டன் மற்றும் கனடாவின் ஜேக்கப் சிம்மர்மன் ஆகிய இரு கணித வல்லுநர்களும் இந்த ஆண்டிற்கான ஃபீல்ட்ஸ் மெடல் விருதைப் பெற்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:12:10 AM (IST)

இலங்கை ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பு வழக்கு : உயர் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:15:09 AM (IST)

பாகிஸ்தானில் டிரோன் மூலம் குண்டு வீச்சு: 11 போலீசார் பலி, 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வெள்ளி 31, ஜூலை 2026 12:55:12 PM (IST)

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது சர்வதேசப் பிடிவாரண்ட்: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
புதன் 29, ஜூலை 2026 4:46:39 PM (IST)

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!
புதன் 29, ஜூலை 2026 12:04:25 PM (IST)

ஜெர்மனி ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் திருவிழா: அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மியர் பங்கேற்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:21:10 PM (IST)







