» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கையில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி, 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!
வியாழன் 4, ஜூன் 2026 5:43:08 PM (IST)

இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட எதிர்பாராத பயங்கர தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து தென்கிழக்கே சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அங்குருவடோட்டா பகுதியில் இந்த முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள காப்பகக் கட்டடத்தில் இன்று திடீரெனப் பயங்கரமான முறையில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டடம் முழுவதும் தீ கடகடவெனப் பரவியதால், அங்கிருந்த முதியவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் உள்ளேயே மாட்டிக்கொண்டனர்.
இக்கோர விபத்தில் சிக்கி 10 முதியவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் மீட்புப் படையினர் மற்றும் போலீசார், தீயில் சிக்கி உயிருக்குத் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன் மூலம் இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படுகாயமடைந்த 7 பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவமனை வட்டாரங்களும், உள்ளூர் போலீசாரும் அச்சம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜிடிபி அடிப்படையில் உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா: ரஷிய அதிபர் புதின் பிரகடனம்
வெள்ளி 5, ஜூன் 2026 12:16:30 PM (IST)

ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பரிதாப பலி; குவைத்தில் விமான சேவைகள் முடக்கம்!
புதன் 3, ஜூன் 2026 5:43:58 PM (IST)

இந்தியா, சீனா மீது 12.5% கூடுதல் வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி புதிய பரிந்துரை!
புதன் 3, ஜூன் 2026 11:41:04 AM (IST)

நான் இல்லையென்றால் சிறையில் இருந்திருப்பீர்கள்! – நெதன்யாகுவை எச்சரித்த டொனால்ட் டிரம்ப்!
செவ்வாய் 2, ஜூன் 2026 11:01:57 AM (IST)

பிரான்சில் கால்பந்து கொண்டாட்டத்தின்போது வன்முறை: 400க்கும் மேற்பட்டோர் கைது!
திங்கள் 1, ஜூன் 2026 12:51:54 PM (IST)

அணு ஆயுத தயாரிப்பைக் கைவிடாவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை!
ஞாயிறு 31, மே 2026 8:56:20 PM (IST)










