» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி : அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:34:04 AM (IST)

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக இந்தியா, சீனா, சுலோவாக்கியா, ஹங்கேரி, அசர்பைஜான் ஆகிய 5 நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கும் மசோதா செனட் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மறைந்த குடியரசு கட்சி முன்னாள் எம்.பி. லின்ட்சே கிரகாம் உள்ளிட்டோரால் கடந்த ஜூலை மாதத்திலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக கடுமையாக குரல் எழுப்பி வந்தநிலையில் கடந்த மாதம் அவர் உயிரிழந்தார். போரில் ஈடுபடும் நாடுகள் மற்றும் அதற்கு உதவும் நாடுகள் மீது வரி என்ற ஆயுதம் மூலமாக தண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த மசோதாவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தன. குறிப்பாக இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை அமெரிக்கா முன்னெடுத்து வரும்நிலையில் அதற்கு எதிராக இந்த மசோதா அமையும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் கிடப்பில் போடப்பட்டிருந்தநிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது.

அப்போது ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 சதவீதம்வரை இறக்குமதி வரி விதிக்க வழிவகுக்கும் புதிய மசோதா செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. 100 எம்.பி.க்கள் கொண்ட இந்த சபையில் 86 எம்.பி.க்கள் பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. 11 எம்.பி.க்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேநேரத்தில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் 15 ஐரோப்பிய நாடுகளுக்கு, உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கி உதவுவதாக கூறி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான 100 சதவீத வரிவிதிப்பு மசோதாவுக்கு செனட் சபையில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக கென்டக்கி மாகாண குடியரசு கட்சி எம்.பி. ரான்ட் பால் மற்றும் ஒரேகான் மாகாண ஜனநாயக கட்சி எம்.பி. ரான் வைடன் ஆகியோர், "இந்த நடவடிக்கை ஒருவரது காலில் தாமே சுட்டுக்கொள்வதற்கு சமமானது” என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த மசோதா முழுமையாகச் சட்டமாக மாற அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலுக்கு விடப்பட்டு பின்னர் ஜனாதிபதியிடம் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இந்தியா மீது 100 சதவீதம் வரிவிதிக்க டிரம்புக்கு அதிகாரம் கிடைக்கும். இந்த மசோதாவை அமெரிக்கா நிறைவேற்றி இருப்பது இந்தியா, சீனா நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory