» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிரான்சில் கால்பந்து கொண்டாட்டத்தின்போது வன்முறை: 400க்கும் மேற்பட்டோர் கைது!
திங்கள் 1, ஜூன் 2026 12:51:54 PM (IST)

பிரான்சில் கால்பந்து கொண்டாட்டத்தின்போது வன்முறை வெடித்ததது. சாலையில் வாகனங்ளுக்கு தீ வைத்துக் கொளுத்தியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் ஆர்செனல் அணியை வீழ்த்தி பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனைத் தொடர்ந்து பிரான்சில் வெடித்த வன்முறையில் 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹங்கேரியில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியின் 5-வது நிமிடத்தில் ஆர்செனல் அணியின் கை ஹாconvertஸ் கோல் அடித்து 1-0 என முன்னிலை தந்தார். 64-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி பிஎஸ்ஜி அணியின் டெம்பேலே கோல் அடித்து 1-1 என ஆட்டத்தைச் சமன் செய்தார்.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஆட்டம் சமனானதால், வெற்றியாளரைத் தீர்மானிக்க 'பெனால்டி ஷூட் அவுட்' முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் பிஎஸ்ஜி அணி 4-3 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 2-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
பிஎஸ்ஜி அணியின் இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கொண்டாட்டங்கள் வன்முறையாக மாறின. ரசிகர்கள் மைதானத்திற்குள்ளும் வெளியேயும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடியபோது, போலீசாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பல போலீசார் காயமடைந்தனர்.
வன்முறையாளர்கள் சாலையில் சென்ற வாகனங்கள் மற்றும் பொது சொத்துகளுக்குத் தீ வைத்ததால் பெரும் பதற்றம் நிலவியது. கலவரத்தைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை காரணமாகப் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி : அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:34:04 AM (IST)

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்று அகதிகள் கடலில் மூழ்கிய பரிதாபம்: உயிரிழப்பு 100 ஆக உயர்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:49:35 PM (IST)

இலங்கையில் தொடரும் சிறைக் கலவரங்கள்: கைதிகள் மோதலில் 3 பேர் பலி; 23 பேர் படுகாயம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:18:26 PM (IST)

தாய்லாந்து பள்ளியில் மாணவன் துப்பாக்கிச்சூடு: ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:33:44 PM (IST)

95 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறை: பிரிட்டன் பூங்காவில் உலக சாதனை படைத்த அரிய பறவை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:23:54 PM (IST)

நிலவில் மோதியது 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் பாகம்: பூமிக்கு ஆபத்தா? நாசா விளக்கம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:56:22 PM (IST)








