» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அணு ஆயுத தயாரிப்பைக் கைவிடாவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை!
ஞாயிறு 31, மே 2026 8:56:20 PM (IST)

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில், அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புதல் அளிக்காவிட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சத் சனிக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், அணு ஆயுதம் தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒத்துழைக்க மறுத்தால் ராணுவ நடவடிக்கையைத் தொடர அமெரிக்கா தயாராக உள்ளது. தாக்குதலை மீண்டும் தொடங்குவதற்கான அத்தனை ராணுவ பலமும், திறமையும் எங்களிடம் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது.
ஈரான் உடனான மோதலில் கவனம் செலுத்தும் அதே வேளையில், இந்தோ - பசிபிக் பிராந்தியப் பிரச்சினைகளையும் நாங்கள் உற்று கவனித்து வருகிறோம். எங்களால் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்ய முடியும். இந்தப் போர் நிறுத்தம் நீடிக்க வேண்டும் என்றே அதிபர் டொனால்டு ட்ரம்ப் விரும்புகிறார். அதே நேரத்தில் ஈரானிடம் அணு ஆயுதங்கள் சிக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்." இவ்வாறு பீட் ஹெக்சத் தெரிவித்தார்.
மேற்காசியப் போரும் தற்போதைய நிலவரமும்:
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டுத் தாக்குதலை மேற்கொண்டன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால் மேற்காசியாவில் போர் மூண்டு, உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி இருதரப்பிற்கும் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருப்பினும், அணு ஆயுதத் தயாரிப்பு விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் பணியை முழுமையாக நிறுத்தினால், அதற்குப் பகரமாகப் பல்வேறு சலுகைகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக: அணுமின்சக்தி திட்டத்தில் 30 பில்லியன் டாலர் முதலீடு செய்தல். ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேசப் பொருளாதாரத் தடைகளை நீக்குதல். வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் பணத்தை விடுவித்தல்.
இந்தப் போர் நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பாக இறுதி முடிவை எடுப்பதற்காக, மிக விரைவில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் ஒன்றை கூட்டவுள்ளதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் இந்த அதிரடி எச்சரிக்கை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜிடிபி அடிப்படையில் உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா: ரஷிய அதிபர் புதின் பிரகடனம்
வெள்ளி 5, ஜூன் 2026 12:16:30 PM (IST)

இலங்கையில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி, 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!
வியாழன் 4, ஜூன் 2026 5:43:08 PM (IST)

ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பரிதாப பலி; குவைத்தில் விமான சேவைகள் முடக்கம்!
புதன் 3, ஜூன் 2026 5:43:58 PM (IST)

இந்தியா, சீனா மீது 12.5% கூடுதல் வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி புதிய பரிந்துரை!
புதன் 3, ஜூன் 2026 11:41:04 AM (IST)

நான் இல்லையென்றால் சிறையில் இருந்திருப்பீர்கள்! – நெதன்யாகுவை எச்சரித்த டொனால்ட் டிரம்ப்!
செவ்வாய் 2, ஜூன் 2026 11:01:57 AM (IST)

பிரான்சில் கால்பந்து கொண்டாட்டத்தின்போது வன்முறை: 400க்கும் மேற்பட்டோர் கைது!
திங்கள் 1, ஜூன் 2026 12:51:54 PM (IST)










