» செய்திகள் - விளையாட்டு » உலகம்
காசா நகரில் இஸ்ரேல் தாக்குதல்: புதிய ஹமாஸ் தளபதி முகமது ஒடே கொல்லப்பட்டார்!
வியாழன் 28, மே 2026 8:34:43 PM (IST)

காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடி வான்வழி தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் புதிய ராணுவ தளபதியான முகமது ஒடே கொல்லப்பட்டார்.
கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் எல்லை தாண்டி இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; 251 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இந்த வரலாற்று பேரழிவிற்கு பழிவாங்கவே இஸ்ரேல் காசா மீது 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போரை தீவிரமாக தொடுத்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பின் முக்கிய ராணுவ தளபதியான இசுதீன் அல்-ஹடாத் கடந்த 15ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து ஹமாஸின் மிக முக்கிய உயர்மட்ட தலைவர்களில் ஒருவரான முகமது ஒடே புதிய தளபதியாக பொறுப்பேற்றார்.
அடுக்குமாடி குடியிருப்பில் தாக்குதல்:
இந்நிலையில் காசா நகரின் ரிமால் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தை குறிவைத்து இஸ்ரேல் துல்லியமான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் புதிய ராணுவ தளபதியான முகமது ஒடே கொல்லப்பட்டார். இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட 4ஆவது முக்கிய தளபதி இவர் என இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலில் முகமது ஒடேவுடன் சேர்ந்து அவரது மனைவி மற்றும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து பெண்கள் உள்பட 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது காசாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் இஸ்ரேல் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், புனித பக்ரீத் பண்டிகைக்கு முன்தினம் இத்தாக்குதல் நடந்துள்ளது. இரண்டு ஆண்டுகளைத் தாண்டி நீடிக்கும் இப்போரினால் காசாவின் 90 சதவீத மக்கள் (20 லட்சம் பேர்) வீடுகளை இழந்து, கழிவுநீர் தேங்கிய தற்காலிக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பின்னும் 880 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இப்போரில் பெண்கள், குழந்தைகள் உள்பட இதுவரை 72 ஆயிரத்து 700க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி : அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:34:04 AM (IST)

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்று அகதிகள் கடலில் மூழ்கிய பரிதாபம்: உயிரிழப்பு 100 ஆக உயர்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:49:35 PM (IST)

இலங்கையில் தொடரும் சிறைக் கலவரங்கள்: கைதிகள் மோதலில் 3 பேர் பலி; 23 பேர் படுகாயம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:18:26 PM (IST)

தாய்லாந்து பள்ளியில் மாணவன் துப்பாக்கிச்சூடு: ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:33:44 PM (IST)

95 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறை: பிரிட்டன் பூங்காவில் உலக சாதனை படைத்த அரிய பறவை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:23:54 PM (IST)

நிலவில் மோதியது 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் பாகம்: பூமிக்கு ஆபத்தா? நாசா விளக்கம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:56:22 PM (IST)








